Categories
தேசிய செய்திகள்

“புதிய கொரோனா”… 24 மணி நேரம் ஆகும்… வெளியான புதிய தகவல்..!!

புதிய கொரோனா வைரஸை கண்டுபிடிக்க குறைந்தது 24 மணி நேரமாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் மிக வேகமாக பரவக்கூடிய புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே இதனை அடுத்து இந்த புதிய வைரஸ் 70% அதி வேகமாக பரவக்கூடியது என இங்கிலாந்து அரசு தெரிவித்தது. இதற்கு இடையே இங்கிலாந்து-இந்தியா விமான போக்குவரத்து நேற்று முதல் தடை செய்யப்பட்டது. எனினும், கடந்த சில தினங்களில் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு வந்த 22 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர்களுக்கு புதிய கொரோனா தொற்று பாதிப்பு இருக்கிறதா? என்று இன்னும் உறுதியாகவில்லை.

அவர்களது மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய கொரோனா வைரஸ் கண்டுபிடிக்க 24 மணி நேரமாகும் என இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலர் டாக்டர் சேகர் மந்தே தெரிவித்துள்ளார். இதுகுறித்து என்டிடிவி ஊடகத்தில் பேசியபோது புதிய கொரோனா வைரஸை கண்டுபிடிக்க மேற்கொள்ளப்படும் ஜீனோம் சீக்வென்சிங் சோதனைகளுக்கு குறைந்தபட்சம் 24 மணி நேரம் ஆகும்.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி புதிய கொரோனவை கட்டுப்படுத்தக் கூடிய சக்தி இருக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் ஆறு பரிசோதனை கூடங்கள் அமைக்கப் பட்டுள்ளது. இங்கிலாந்திலிருந்து வந்த நோயாளிகள் மாதிரிகள் இந்த சோதனை கூடத்தில் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது.” என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |