வெளிநாடுகளில் இருந்து திரும்பும் மலேசியர்கள், இன்று முதல் நாட்டிற்குள் நுழைந்தவுடன் கொரோனா (கோவிட் -19) சோதனை செய்வதற்கு 30 வெள்ளி முதல் 150 வெள்ளி வரை கட்டணமாக செலுத்த வேண்டும். அதுபோல குடிமக்கள் அல்லாதவர்கள் மீதான சோதனைக்கு அதன் வகையைப் பொறுத்து கட்டணம் செலுத்துவார்கள் என அரசாங்கம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
ஜூன் 26 ஆம் தேதி புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்ட அதன்படி, இன்று ( திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருதாகத்தெரிவித்திருக்கிறது. தொற்று நோய்களைத் தடுப்பது கட்டுப்படுத்துதல் (2019 கோவிட் -19) கண்டறிதல் சோதனை) விதிமுறைகள் 2020 என இப்புதிய முறை அழைக்கப்படும்.