உருமாறிய கொரோனா முந்தைய கொரோனாவை விட ஆபத்தானது என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் புதிய உருமாறிய கொரோனாவும் பரவியுள்ளது. இது முந்தைய கொரோனாவை விட ஆபத்து என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். மேலும் வேகமாக பரவும் தன்மையுள்ள இந்த உருமாறிய கொரோனா அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துவதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறியுள்ளார். லண்டனைச் சேர்ந்த இம்பீரியல் கல்லூரி மருத்துவ விஞ்ஞானிகள் உருமாறிய கொரோனா குறித்த ஆராய்ச்சியில், புதிய கொரோனா மிகவும் ஆபத்தானது என்று கூறியுள்ளனர்.
அதேசமயம் எந்த அளவிற்கு அதை உறுதிப்படுத்துவது என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர். ஆனால் முந்தைய கொரோனா வைரஸினால் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டால் அதில் 10 பேர் மட்டும் உயிர் இழப்பு ஏற்பட்டதாகவும், உருமாறிய கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.