Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வைரஸ்… ” 7 அறிகுறிகள்”… அதிரவைக்கும் ரிப்போர்ட்..!!

புதிய வகை கொரோனா, உருமாற்றம் பெற்ற கொரோனா என்று பல தகவல்கள் நமக்கு பீதியை அளிக்கின்றது. இந்த உருமாற்றம் பெற்ற கொரோனாவின் அறிகுறிகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு வைரஸ் காலப்போக்கில் அதன் வாழ்வியல் கூறுகளில் மாற்றம் பெற்று உரு மாற்றம் அடைவது இயல்பான ஒன்று என்று மருத்துவ உலகம் கூறுகிறது. கடந்த ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் இதுவரையில் 17 முறை தனது மரபியல் கூறுகளை மாற்றியுள்ளதாக அறிவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் அறிகுறிகள் சிலவற்றை இங்கிலாந்து நாட்டின் சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கிறது. ஏற்கனவே உள்ள அறிகுறிகளான வறட்டு இருமல், காய்ச்சல், வாசனை மற்றும் சுவை இழப்பு ஆகியவற்றுடன் சேர்த்து புதிதாக 7 அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிகப்படியான சோர்வு, பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, மனக்குழப்பம், தசை வலி, தோல் வெடிப்பு, தோல் அரிப்பு ஆகியவை உருமாற்றம் பெற்றுள்ள புதிய கொரோனா வைரஸ் அறிகுறிகளை இங்கிலாந்து சுகாதாரத்துறை இவ்வாறு பட்டியலிட்டுள்ளது.

Categories

Tech |