தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 48,019 ஆக உயர்ந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 61 பேர், தமிழகத்தை சேர்ந்த 1,454 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஈரோடு, கிருஷ்ணகிரி, நீலகிரி, புதுக்கோட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக யாரும் கொரோனோவால் பாதிக்கப்படவில்லை.
இன்று 49 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 528ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 26,782 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 55.77% பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.