தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,982 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 40,698ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், நீலகிரி, திருப்பத்தூர் , திருப்பூர் ஆகிய 6 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்படவில்லை.
மேலும் 31 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை – 1,479, அரியலூர் – 4, செங்கல்பட்டு – 128, கோவை – 5, கடலூர் – 4, தருமபுரி – 3, திண்டுக்கல் – 2, கள்ளக்குறிச்சி – 13, காஞ்சிபுரம் – 26, மதுரை – 31, நாகை – 8, நாமக்கல் – 2, புதுக்கோட்டை – 6, பெரம்பலூர் – 1,
ராமநாதபுரம் – 5, ராணிப்பேட்டை – 4, சிவகங்கை – 12, தென்காசி – 4, தஞ்சை – 5 தேனி – 3, திருவள்ளூர் – 92, திருவண்ணாமலை – 22 பேர், திருவாரூர் – 6, தூத்துக்குடி – 18, நெல்லை – 15, திருச்சி – 7 ,விழுப்புரம் – 16, விருதுநகர் – 4, திருச்சி – 7, கன்னியாகுமரி – 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த 1,933 பேருக்கு, வெளிநாட்டில் இருந்து வந்த 49 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.