தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் புதிதாக இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த வகையில், சென்னையில் 567, திருவள்ளூர் 42, செங்கல்பட்டில் 34, காஞ்சிபுரத்தில் 13, திருவண்ணாமலையில் 5, மதுரையில் 19, கள்ளக்குறிச்சியில் 8, தூத்துக்குடியில் 22, தேனியில் 4, கடலூரில் 1, விருதுநகரில் 8, கரூரில் 1, ராணிப்பேட்டையில் 4, தென்காசியில் 8, விழுப்புரத்தில் 4, திண்டுக்கல்லில் 5, வேலூரில் 1, சிவகங்கையில் 2, புதுக்கோட்டையில் 2, தஞ்சையில் 4, திருப்பத்தூரில் 1, திருநெல்வேலியில் 11 பேருக்கு இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஈரோடு, திருப்பூர், கோவை உட்பட சில மாவட்டங்களில் 28 நாட்களாக எந்த பாதிப்பும் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். மேலும், கோவை, ஈரோடு, திருப்பத்தூர், திருவாரூர் மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் கிடையாது என தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 776 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் காரணமாக மொத்த உயிரிழப்புகள் எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 400 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,282 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 79 பேருக்கு இன்று தொடரு இருப்பது உறுதியாகியுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களிடம் எல்லையில் சோதனை செய்யும்போது பாதிப்பு தெரியவருவதாக கூறப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்து வருபவர்களிடம் எல்லையில் சோதனை செய்யும்போது பாதிப்பு தெரியவருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் 10 விமானங்களில் தமிழகம் வந்த 2,139 பேரில் 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.