தமிழகம் முழுவதும் இன்று சுமார் 25 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 1149, செங்கப்பட்டில் 134, திருவள்ளூரில் 57, காஞ்சிபுரத்தில் 18, திருவண்ணாமலையில் 11, கடலூரில் 10, நெல்லையில் 4, அரியலூரில் 1, விழுப்புரத்தில் 4, தூத்துக்குடியில் 26, மதுரையில் 5, கள்ளக்குறிச்சியில் 20, சேலத்தில் 5, திண்டுக்கல்லில் 9, விருதுநகரில் 4, ராணிப்பேட்டையில் 6, தேனியில் 2, தஞ்சையில் 4,ராமநாதபுரத்தில் 6, தென்காசியில் 3, கன்னியாகுமரியில் 7, நாகப்பட்டினத்தில் 5, ஈரோட்டில் 2, வேலூரில் 33, திருவாரூரில் 3 என மொத்தம் 25 மாவட்டங்களில் இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாநிலத்தில் இருந்து வந்த 30 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், மகாராஷ்டிராவில் இருந்து வந்த 22 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர டெல்லியில் இருந்த வந்த 7 பேருக்கும், ஹரியானாவில் இருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மேலும், வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 12 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கத்தாரில் இருந்து 9 பேர், குவைத்தில் இருந்து வந்த 3 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,562 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் மொத்தமாக கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 33 ஆயிரத்தை கடந்து 33,229 ஆக அதிகரித்துள்ளது.