தமிழகம் முழுவதும் இன்று 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
சென்னையில் 1156 பேர், செங்கல்பட்டில் 135 பேர், திருவள்ளூரில் 35 பேர், காஞ்சிபுரத்தில் 16 பேர், திருவண்ணாமலையில் 6 பேர், கடலூரில் 6 பேர், நெல்லையில் 2 பேர், அரியலூரில் ஒருவர், விழுப்புரத்தில் 11 பேர், தூத்துக்குடி மற்றும் மதுரையில் தலா 14 பேர், கள்ளக்குறிச்சியில் 8 பேர், சேலம் மற்றும் கோவையில் தலா 3 பேர், திண்டுக்கல்லில் 11 பேர், விருதுநகரில் 5 பேர், தேனியில் 3 பேர், ராணிப்பேட்டையில் 10 பேர், திருச்சியில் 4 பேர், தஞ்சையில் 7 பேர், தென்காசியில் 3 பேர், ராமநாதபுரம் மற்றும் வேலூரில் தலா 9 பேர், திருவாரூரில் ஒருவர், திருப்பத்தூரில் 6 பேர், புதுக்கோட்டை மற்றும் தர்மபுரியில் தலா 2 பேர் என 27 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிமாநிலத்தில் இருந்து வந்த 11 பேர் இன்று கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் வந்த 2 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல போல டெல்லியில் இருந்து வந்த 7 பேர், ஜம்மு காஷ்மீர் மற்றும் ஆந்திராவில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
அதேபோல வெளிநாட்டில் இருந்து வந்த 7 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீகரத்தில் இருந்து வந்த 4 பேர், குவைத்தில் இருந்து வந்த 3 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,667 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் கொரோனா பாதித்தவர்களில் ஆண்கள் 945 பேர் மற்றும் பெண்கள் 570 பேர் ஆவர். கொரோனா தோற்று உள்ளதா என இன்று மட்டும் 16,275 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இதுவரை 5,92,970 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 14,396 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.