2ம் நாளாக தமிழகம் முழுவதும் இன்று 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 2,393, மதுரையில் 257, செங்கல்பட்டு 160, திருவள்ளூர் 153, வேலூரில் 70, காஞ்சிபுரத்தில் 90, தென்காசியில் 11, திருவண்ணாமலையில் 16, விழுப்புரம் 47, தூத்துக்குடியில் 40, ராமநாதபுரத்தில் 36, நெல்லையில் 45, தஞ்சாவூரில் 23, ராணிப்பேட்டையில் 24, சிவகங்கையில் 50, கோவையில் 9, தருமபுரியில் 11, திண்டுக்கல்லில் 37, ஈரோட்டில் 19, கள்ளக்குறிச்சியில் 88,
கடலூரில் 65, கன்னியாகுமரியில் 20, கரூரில் 1, கிருஷ்ணகிரியில் 6, நாகப்பட்டினத்தில் 2, நீலகிரியில் 7, சேலத்தில் 25, தேனியில் 75, திருப்பத்தூரில் 22, திருவாரூரில் 12, திருப்பூரில் 20, திருச்சியில் 40, விருதுநகர் 49, நாமக்கல்லில் 3 என இன்று மட்டும் 34 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிதாக ஏற்பட்டுள்ளது.
அரியலூர், பெரம்பலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மட்டும் இன்று புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை. பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 76 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 11 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனி 6, பக்ரைன் 2, ஜப்பான், குவைத் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 90,167 ஆக உயர்ந்துள்ளது.