3ம் நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் 1,939, செங்கல்பட்டில் 248, மதுரையில் 218, திருவள்ளூரில் 146, வேலூரில் 118, சேலத்தில் 34, காஞ்சிபுரத்தில் 98, ராமநாதபுரத்தில் 101, திருவண்ணாமலையில் 127, கள்ளக்குறிச்சியில் 22, ராணிப்பேட்டையில் 96, கோவையில் 33, தேனியில் 35, தூத்துக்குடியில் 43, திருச்சியில் 31, கன்னியாகுமரியில் 34, தஞ்சையில் 16, நெல்லையில் 12, திருவாரூரில் 46,
கடலூரில் 11, நாகையில் 40, விழுப்புரத்தில் 62, கிருஷ்ணகிரியில் 36, திருப்பூரில் 9, தென்காசியில் 11, புதுக்கோட்டையில் 19, தருமபுரியில் 4, திண்டுக்கல்லில் 26, ஈரோட்டில் 14, அரியலூரில் 4, நாமக்கல்லில் 3, கரூரில் 1, நீலகிரியில் 10, சிவகங்கையில் 29, திருப்பத்தூரில் 16, பெரம்பலூரில் 3 என இன்று 36 மாவட்டங்களில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிற மாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர்களில் 81 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய 8 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் 1, கத்தார் 1, மலேசியா 1, சவூதி அரேபியாவில் 2, மாலத்தீவு 1, சிங்கப்பூரில் இருந்து வந்த 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 78,355 ஆக உயர்ந்துள்ளது.