Categories
கிரிக்கெட் விளையாட்டு

புதிய கிரிக்கெட் அகாடமி தொடங்கிய அஸ்வின்…..!!

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஜென் நெக்ஸ்ட் என்ற கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து புதிய கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆல்ரவுண்டரான இவர், பலமுறை இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளார். கடந்தாண்டு ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார்.

Image result for ashwin cricket academy

இந்த நிலையில், ஹைதராபாத் அருகே கொல்லூரில் உள்ள காடியம் கிரிக்கெட் பள்ளியில் ஜென்-நெக்ஸ்ட்(Gen-NExt) என்ற கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து அஸ்வின் புதிய கிரிக்கெட் அகாடமியை தொடங்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”இந்த அகாடமியில் சிறந்த உள்கட்டமைப்பு, புதுமையான தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன. இங்கு சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம் அவர்கள் சர்வதேச தரத்திற்கு வளர்வார்கள்” என்றார்.இதன்பின்னர் சிறிதுநேரம் அங்குள்ள மாணவர்களுடன் அஸ்வின் கிரிக்கெட் விளையாடினார்.

Categories

Tech |