வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
30 தேதி அன்று வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்க கடலில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
இதன் காரணமாக ஜூலை ஒன்று முதல் 3 தேதி வரை வடகிழக்கு,கிழக்கு,மற்றும் இந்திய மேற்கு கடற்பகுதியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே வேளையில் வட மேற்கு இந்தியாவில் அடுத்த 4 தினங்களுக்கு வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி உயர கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மழைக்கான சாத்தியக்கூறுகள் குறைவு தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது.