Categories
தேசிய செய்திகள்

புதிய கல்வி கொள்கை அமல் குறித்து ஆலோசனை… ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு..!!

புதிய கல்வி கொள்கை வரும் மே 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு முதலே பள்ளி மற்றும் கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டு உள்ளது. பள்ளி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் வகுப்பு மூலம் பாடம் பயின்று வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வரும் மே 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்துவது குறித்தும், ஆன்லைன் வகுப்பு குறித்தும் பேசப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணொளியில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து மாநில கல்வித் துறை செயலாளர்கள் பங்கேற்கின்றனர்.

Categories

Tech |