Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் நிதி நெருக்கடிக்கு மத்தியில்… நிதி மந்திரியாக பொறுப்பேற்ற இஷாக் தார்…!!!

பாகிஸ்தான் நாட்டில் நிதி நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நிலையில், இஷாக் தார் புதிய நிதி மந்திரியாக நேற்று பொறுப்பேற்று இருக்கிறார்.

பாகிஸ்தான் சமீப வருடங்களாக கடும் நிதி நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத விதமாக இந்த வருடத்தில் பருவமழை, மொத்தமாக அந்நாட்டை புரட்டி போட்டிருக்கிறது. பலத்த மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டதில் பொருளாதாரம் மிகவும் மோசமடைந்திருக்கிறது.

இந்நிலையில், நேற்று நாட்டின் புதிய நிதி மந்திரியாக இஷாக் தார் பொறுப்பேற்று இருக்கிறார். இதற்கு முன்பு, இவர் நான்கு தடவை நிதி அமைச்சராக இருந்திருக்கிறார். இதற்கு முன் அதிபர் இம்ரான் கான் ஆட்சியில் இவர் ஊழல் வழக்கில் சிக்கினார். அப்போது, விசாரணையிலிருந்து தப்பிப்பதற்காக 2017 ஆம் வருடத்தில் இங்கிலாந்துக்கு தப்பி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று நிதி மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்ட அவர், பண வீக்கத்தை கட்டுப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் மீட்பேன் என்று உறுதி அளித்திருக்கிறார்.

Categories

Tech |