Categories
உலக செய்திகள்

போரால் கடும் பாதிப்படைந்த லிபியா…. செல்லப்பிராணிகளுக்கு புது மருத்துவமனை…!!!

லிபியா நாட்டில் பல வருடமாக நீடித்துக்கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட செல்லப்பிராணிகளுக்கு புதிதாக மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கிறது.

லிபியா நாட்டில் பல வருடங்களாக உள்நாட்டுப்போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் செல்லப்பிராணிகள் அதிகமாக பாதிப்படைகின்றன. எனவே பெங்காசி எனும் நகரத்தில் புதிதாக செல்லப்பிராணிகளின் சிகிச்சைகளுக்கு என்று மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கிறது.

இங்கு, நாய், குதிரை, பூனை மற்றும் புலி உட்பட பல விலங்குகள் கொண்டுவரப்படுகின்றன. போர் காரணமாக நகரின் பல மருத்துவமனைகளும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியிருக்கிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை மேற்கொள்வதே கடினமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |