Categories
சினிமா தமிழ் சினிமா

“கோவையில் புதிய மருத்துவமனை”…. சினிமாவிலிருந்து விலகி மருத்துவராக பணி?….. சாய் பல்லவி‌யின் திடீர் அதிரடி முடிவு….!?!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சாய் பல்லவி. மலையாள சினிமாவில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சாய் பல்லவி முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார். இவர் நடிப்பில் அண்மையில் கார்கி திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை சாய் பல்லவி சினிமாவை விட்டு விலகுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சாய் பல்லவி மருத்துவ படிப்பு படித்துக் கொண்டிருக்கும் போதே பிரேமம் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததால் சினிமாவுக்குள் நுழைந்து விட்டார். இதனையடுத்து ஜார்ஜியாவில் மருத்துவம் படித்த சாய் பல்லவி தற்போது தன்னுடைய படிப்பை வீணடிக்க கூடாது என்று முடிவு செய்துள்ளாராம்.

இதன் காரணமாக தன்னுடைய சொந்த ஊரான கோயம்புத்தூரில் புதிதாக மருத்துவமனை ஒன்றினை கட்டுவதற்கு சாய் பல்லவி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் சினிமாவை விட்டு விலகுவதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஒரு பக்கம் மருத்துவமனையையும் கவனித்துக் கொண்டு மற்றொரு பக்கம் நடிப்பையும் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

Categories

Tech |