சென்னை ராயபுரம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களுக்கு புதிய அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராயபுரம் மண்டலத்திற்கு பாலசுப்ரமணியம், ஆலந்தூர் மண்டலத்திற்கு நிர்மல் ராஜ், பெருங்குடி மண்டலத்தில் அனீஸ் சேகர் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 15வது மண்டலமான சோழிங்கநல்லூருக்கு விஷ்ணு ஐஏஎஸ், சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, சென்னை ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் விடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. கொரோனா தடுப்பு பணியில் இருந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் மண்டலத்திற்கு நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி கருணாகரன், பெருங்குடிக்கு நியமிக்கப்பட்ட வெங்கடேஷ், ஆலந்தூருக்கு நியமிக்கப்பட்ட எம்.எஸ்.சண்முகம் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது விடுவிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு பதில் புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் பெயர்களை வெளியிட்டுள்ளது. அதிகாரிகளின் திடீர் மாற்றம் சென்னை வட்டாரங்களில் பெரிதும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. மண்டலம் -1 ஆன ராயபுரம் பகுதிக்கு காமராஜ் ஐஏஎஸ் முன்னதாக நியமிக்கப்பட்டிருந்தார்.