விஷால் – அபிநயா காதல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 45 வயதை கடந்துவிட்ட இவரின் வாழ்க்கையில் சில காதல்கள் வந்து போனது. மேலும், ஒரு நிச்சயதார்த்தமே நின்று போனது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, நடிகர் சங்க தலைவராக இருக்கும் இவர் தற்போது சங்க கட்டிடத்தை கட்டுவதில் பிஸியாக இருந்து வருகிறார். மேலும், நல்ல படங்களை கொடுத்து இருக்கிற கடனை அடைப்பதிலும் கவனமாக இருக்கிறார். இந்நிலையில், இவர் நடிகை அபிநயாவை காதலித்து வருவதாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாகவும் இணையத்தில் வதந்திகள் பரவ தொடங்கியது.
ஆனால், விஷால் நடிக்கும் ‘மார்க் ஆண்டனி ‘ படத்தில் இவர் மனைவியாக நடிக்கிறார். இதற்காக நடத்தப்பட்ட போட்டோசூட் லீக்காகி இருக்கிறது. இதை வைத்து இப்படி வதந்தியை கிளப்பி விட்டனர் என அபிநயா தரப்பில் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.