Categories
ஆட்டோ மொபைல் பல்சுவை

போட்டியுலகத்தில் புதிய கியா செல்டோஸ் … இந்தியாவில் விற்பனைக்கு ரெடி ..!!

இந்தியாவில் புதியதாக கியா செல்டோஸ் காரானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது .

இந்தியாவில் கியா செல்டோஸ் காரானது டெக்-லைன் மற்றும் ஜி.டி.-லைன் என இருவித வேரியண்ட்களிலும் பல்வேறு ஆப்ஷன்களிலும்  கிடைக்கிறது . இந்த கியா செல்டோஸ் காரின் துவக்க விலை ரூ. 9.69 லட்சம் என்றும்  டாப் எண்ட் மாடலின் விலை ரூ. 15.99 லட்சம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது .

Image result for kia seltos

 

இந்நிலையில் , கியா செல்டோஸ் காருக்கான முன்பதிவுகள் ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கி விட்ட நிலையில், இதுவரையில்  25,000-க்கும் அதிக முன்பதிவானது செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக,  இந்த புதிய செல்டோஸ் கார் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் அறிமுகமாகியுள்ளது.  இதனால் , இந்த காரானது  ஹூன்டாய் கிரெட்டா, மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500, டாடா ஹேரியர், ஜீப் காம்பஸ் மற்றும் நிசான் கி்க்ஸ் போன்ற ,

Image result for kia seltos

மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது . இந்த கியா செல்டோஸ் காரானது  1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களும், 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என மொத்தம் மூன்று என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. மேலும்,  இவை பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

Image result for kia seltos

இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 115 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறனையும் , செல்டோஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் 138 பி.ஹெச்.பி. பவர், 242 என்.எம். டார்க் செயல்திறனையும்  வழங்குகின்றன . இவை ,  மூன்று என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொண்டுள்ளது .

Image result for kia seltos

இதுதவிர 1.5 லிட்டர் பெட்ரோல் யூனிட்டில் சி.வி.டி., டீசல் மாடலில் ஐ.வி.டி. மற்றும் டர்போ பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டி.சி.டி. டிரான்ஸ்மிஷன் வசதிகளுடனும்  கிடைக்கிறது. இதுமட்டுமின்றி , கியா செல்டோஸ் காரானது  ரெட், ஆரஞ்சு, கிளேசியர் வைட், க்ளியர் வைட், கிரே, சில்வர், புளு மற்றும் பிளாக் என பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.

Categories

Tech |