Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக கொண்டுவரும் புது சட்டம்…! சுட்டிக்காட்டும் விசிக… வீழ்ந்த பிளான் போட்ட திருமா…!!

செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக தலைமையிலான அரசு பொது சிவில் சட்டத்தை கொண்டுவருவார்கள் என்பதற்கான முன்னோட்டமாக இது அமைந்திருக்கிறது. இந்த போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. மாநிலங்கள் அவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த தனிநபர் மசோதாவை அவர்கள் மக்களவையிலும் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.

மக்களவையில் அவர்களால் பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்டு இருப்பதால்,  அங்கே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள… ஒரு ஏதுவான சூழல் இருக்கலாம். ஆனாலும் கடைசியாக அது வாக்கெடுப்பில் வீழ்த்தப்படும் என்று நான் நம்புகிறேன். பொது சிவில் சட்டம் கொண்டு வருவது….  இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்பதை விட கிறித்தவர்களுக்கு எதிரானது  என்பதை விட…

அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது….  மதச்சார்பின்மைக்கு எதிரானது. பெரும்பான்மை வாதத்தின் அடிப்படையிலான ஒரு அரசு,  ஆட்சியில் நிர்வாகம் இயங்குகிற போது…  சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தான் உண்மையான ஜனநாயகம் என்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்….  அரசியல் நிர்ணய சபையிலே உரையாற்றி இருக்கின்றார். அது பதிவாகியிருக்கிறது…

சிறுபான்மை மக்களுக்கு,  பாதுகாப்பற்ற நிலையை… அச்சுறுத்தும் நிலையை..  ஏற்படுத்துவதுதான் பொதுசிவில் சட்டத்ததைக் கொண்டு வருவதற்கான முயற்சி என்பதை உணர முடிகிறது. எனவே பொது சிவில் சட்டம் மசோதாவை தனி நபர் மசோதாவாக அறிமுகப்படுத்தி இருந்தாலும்,  அது ஆர்எஸ்எஸ் சங்பரிவார்களின் செயல் திட்டம் தான் என்பதை அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகின்றது என தெரிவித்தார்.

Categories

Tech |