பிரித்தானியாவில் புதிதாக கட்டப்படும் வீடுகள் மற்றும் கட்டிடங்களில் 2022-ஆம் ஆண்டு முதல் மின்சார வாகன சார்ஜிங் பாயிண்டுகள் கட்டமைப்பது சட்டப்படி கட்டாயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய அரசாங்கம் நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் 145,000 சார்ஜிங் புள்ளிகள் நிறுவப்படும் என்று கூறியுள்ளது. அதன்படி பிரித்தானியாவில் புதிய சட்டத்தின் கீழ் பணியிடங்கள், அங்காடிகள் மற்றும் பெரிய அளவில் புதுபிக்கப்படும் கட்டிடங்களில் மின்சார வாகன சார்ஜிங் புள்ளிகள் நிறுவுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையானது பிரித்தானியாவில் மின்சார கார்களுக்கு மாறுவதை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இங்கிலாந்து அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்கள் மூலம் வாகனங்களை சார்ஜ் செய்வதற்கான அனைத்து புதிய வேகமான மற்றும் விரைவான கட்டண புள்ளிகளும், பணம் செலுத்துவதற்கான எளிய வழிகளும்” அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.