Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்…? வெளியான அறிவிப்பு..!!

தமிழக தலைமைச் செயலாளர் கே.சண்முகம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்த தலைமைச் செயலாளராக ராஜிவ் ரஞ்சன் நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமைச் செயலாளர் சண்முகம் 31-ந் தேதி ஓய்வு பெறுகிறார் . தற்போது ஊரக வளர்ச்சித்துறையின் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா அடுத்த தலைமைச் செயலாளர் என கூறப்பட்ட நிலையில் அவருக்கும் முன்னதாக பணியில் சேர்ந்து டெல்லியில் பணியாற்றிய ராஜிவ் ரஞ்சன் மீண்டும் தமிழக பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். எனவே அவர் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |