Categories
சென்னை மாவட்ட செய்திகள்

முதலிரவில் நடந்த சம்பவம்…. புதுப்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள பாலங்குப்பம் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும், இவரது அத்தை மகளான நந்தினி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் முதலிரவு அன்று கார்த்திகேயன் நந்தினியுடன் பேசிக்கொண்டிருந்தார். இதனையடுத்து நந்தினி தூங்கிய பிறகு கார்த்திகேயன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதன் பின் காலை 6 மணிக்கு எழுந்து பார்த்த நந்தினி தனது கணவர் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு விரைந்து சென்ற உறவினர்கள் கார்த்திகேயன் சடலமாக  தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கார்த்திகேயனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |