தற்போது இருக்கும் மனித இனத்துடன் ஒத்துப்போகாத ஆதி மனித இனத்தின் மண்டை ஓடு மற்றும் தாடைப் பகுதியை இஸ்ரேல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
இஸ்ரேல் நாட்டிலிருக்கும் ராம்லா என்னும் பகுதியில் ஹீப்ரூ பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தங்களுடைய ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள். இந்நிலையில் தற்போது இருக்கும் மனித இனங்களோடு ஒத்துப்போகாத ஆதி மனிதர்களுடைய மண்டை ஓடு மற்றும் தாடை பகுதி ஆராய்ச்சியாளர்களிடம் சிக்கியுள்ளது.
இதனை ஆய்வு செய்த இஸ்ரேல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர், இந்த மண்டை ஓடு மற்றும் தாடை பகுதியை “நேஷர் ராம்லா ஹோமோ” இனம் என்று வகைப்படுத்தியுள்ளார்கள். இதையடுத்து ராம்லா நகரில் இந்த ஆதிமனிதன் இனத்தினர் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.