Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கல்யாணமாகி 20 நாட்கள்தான் ஆச்சு… தவறுதலாக நடந்த சம்பவம்… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

இருமல் மருந்து என நினைத்து தவறுதலாக பூச்சி மருந்தை குடித்த புதுப்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஈச்சந்தாங்கள் பகுதியில் விவசாயியான மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனலட்சுமி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் இவர்களது வீட்டில் இருக்கும் அலமாரியில் இருமல் மருந்தும், பூச்சி மருந்தும் அருகருகே வைக்கப்பட்டிருந்தது. இதனை அடுத்து புதுப்பெண் தனலட்சுமி இருமல் மருந்து என நினைத்து தவறுதலாக பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்து விட்டார்.

அதன் பின் அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தனலட்சுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமணமான 20 நாட்களில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |