Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருமணம் நடந்த அன்றே… புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்… நடந்த அதிர்ச்சி சம்பவம்… திருச்சியில் பரபரப்பு…!!

காலையில் திருமணம் முடிந்து, மாலையில் புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரத்தில் மலைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் விக்னேஸ்வரனுக்கு சாயல்குடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து இரு வீட்டாரும் மணமக்களை வாழ்த்திய பிறகு புதுமண தம்பதிகள் மணமகள் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு வைத்து சம்பிரதாய முறைப்படி இருவருக்கும் விரிந்து நடைபெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து விக்னேஸ்வரனுக்கு மதியம் 3 மணியளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், நெஞ்சில் கை வைத்தபடி அவர் மயங்கி விழுந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு சாயல்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே விக்னேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் புதுமாப்பிள்ளையின் உடலை பார்த்து மணமகளும், உறவினர்களும் கதறி அழுத சம்பவம் நெஞ்சை பதற வைத்தது.

Categories

Tech |