Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 4 மாசம்தான் ஆச்சு… ஏணியால் நடந்த விபரீதம்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

திருமணமான 4 மாதத்தில் மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் சிவகுமார் என்ற மினி லாரி டிரைவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் தனது மினி லாரியில் இரும்பு ஏணி ஏற்றிக்கொண்டு சிவகுமார் டெலிவரி செய்வதற்காக திருமுல்லைவாயில் பகுதியில் இருக்கும் குப்புசாமி என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இரும்பு ஏணியை அவரது வீட்டின் இரண்டாவது மாடிக்கு கொண்டு சென்ற போது அங்கே இருந்த மின் வயரில் எதிர்பாராதவிதமாக இரும்பு ஏணி உரசி விட்டது. இதனால் மின்சாரம் தாக்கி சிவகுமாரும், குப்புசாமியும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இதனால் சிவகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். அதன்பின் அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த முத்துசாமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவகுமாரின் சடலத்தை கைப்பற்றி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |