விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தபள்ளி பகுதியில் நாராயணா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன்குமார் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நவீன் குமாருக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் விவசாயத்தில் நவீன் குமாருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த நவீன்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவீன்குமாரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.