Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. 1 1/2 மாதத்தில் நடந்த விபரீதம்…. வேதனையில் வாடும் குடும்பத்தினர்….!!

திருமணமான 1 1/2 மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள பீமா நகர் பகுதியில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முரளி கிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த 1 1/2 மாதங்களுக்கு முன்பு முரளிகிருஷ்ணன் கீர்த்தனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த முரளிதரன் கொரோனா ஊரடங்கு சமயத்தில் வேலையின்றி வீட்டிலேயே இருந்துள்ளார். இதனையடுத்து ஆடி மாதத்தை முன்னிட்டு கீர்த்தனா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன்பின் முரளி கிருஷ்ணாவை செல்போனில் தொடர்புகொண்ட கீர்த்தனா வேலை கிடைத்து விட்டதா என அடிக்கடி கேட்டுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த முரளி கிருஷ்ணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில் கீர்த்தனா தனது கணவரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டும் அவர் அழைப்பை ஏற்காததால் சந்தேகமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் ஜன்னல் வழியாக பார்த்த போது தனது கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு கீர்த்தனா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முரளி கிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |