விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் விற்பனையில் ரூபாய் 7 லட்சம் மோசடி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் திருச்சி நெடுஞ்சாலையில் விடுதி ஒன்றை நடத்தி வருபவர் விக்னேஷ்வரன். இவருக்கும் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கும் கடந்த ஒரு வருடமாக பழக்கம் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் திடீரென மோகன்ராஜ் தன்னிடம் அறிமுகமாகும் போதே மோகன்ராஜ் தன்னை இருசக்கர வாகனத்தின் புரோக்கராக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூன்று நான்கு சக்கர வாகனங்களும், 18 இரு சக்கர வாகனங்களும் விற்பனைக்கு தயாராக உள்ளதாகவும் அனைத்தும் புதிய மாடல் நல்ல கண்டிஷனில் இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கான விலைப்பட்டியலை விக்னேஸ்வரனும் கொடுக்கும்போது மிகவும் மலிவாக இருந்தது.
இதை நம்பி வாகனத்தை வாங்கி விடலாம் என்று நினைத்த விக்னேஷ்வரன் அனைத்தையும் நானும் எனது நண்பனும் வாங்கிக் கொள்கிறோம் என்று கூறி முதலில் நேரடியாக ரூபாய் ஒரு லட்சம் பணத்தை முன்பணமாகக் கொடுத்து விட்டு அதன் பின் தனது மாமியாரின் வங்கி கணக்கில் இருந்து ஆறு லட்சத்தை மோகன் ராஜாவிற்கு அளித்துள்ளார்.
இதையடுத்து முதலில் இருசக்கர வாகனங்களை விக்னேஸ்வரன் இடம் மோகன்ராஜ் அளித்தார் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. இது குறித்து மோகன்ராஜ் இடம் சென்று முறையிட்டு எனக்கு வாகனம் வேண்டாம் பணத்தை திருப்பி கொடு என்று கேட்டபொழுது ரூபாய் 95,000த்திற்கான காசோலையை கொடுத்துள்ளார். அதை வங்கியில் செலுத்தியபோது அதில் பணம் ஏதும் இல்லை.
இதனால் விரக்தி அடைந்த அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்று காவல்துறையினர் அதிரடியாக விரைந்து மோகன் ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.