வெயில் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமான பிரியங்கா தற்போது ஒற்றை கதாபாத்திர திரைப்படத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்றவராக பிரியங்கா திகழ்கிறார். இந்த படத்தை தொடர்ந்து இவர் மலையாள சினிமாவில் நடிப்பதற்கு ஆரம்பித்துள்ளார்.
அதன் பின் தமிழ் சினிமாவில் தற்போது பிரியங்கா அபிலாஷ் புருஷோத்தமன் தயாரித்து இயக்கும் ஒற்றை கதாபாத்திர திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தீபன் குரன் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தை பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் குறித்து பிரியங்கா கூறியதாவது, ஒரு பெண் மிகவும் கஷ்டமான சூழ்நிலையை எதிர்கொள்ளும்போது தன்னை அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள அவர் என்னவெல்லாம் செய்கிறாள் என்பது குறித்த படம் தான் நான் தற்போது நடிக்கும் திரைப்படம் என்று தெரிவித்துள்ளார்.