Categories
சினிமா தமிழ் சினிமா

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் புதிய படம்….. ஹீரோ யாருன்னு தெரியுமா…..?

முருகதாஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் பல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதன்படி ஏழாம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ரஜினி என முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களை இவர் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வயதில் தான் வித்தியாசமான படங்களில் நடிக்க முடியும் : கவுதம் கார்த்திக்  - In this age only i can do different movies says Gautham Karthik

கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான தர்பார் திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து, இவர் அடுத்து இயக்கும் படம் குறித்த தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், இவர் தயாரிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் உதவி இயக்குனர் பொன்ராம் இயக்கும் படத்தை முருகதாஸ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |