ஆரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
தமிழ் சினிமாவில் நடிகர் ஆரி பிரபல நடிகராக வலம் வருகிறார். இவர் நெடுஞ்சாலை, மாலைப்பொழுதின் மயக்கத்திலே போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ”பிக்பாஸ்” சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பிறகு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
இதனையடுத்து, இவர் நடிப்பில் தற்போது பகவான், அலேக்கா போன்ற திரைப்படங்கள் உருவாகி உள்ளன. இந்நிலையில், இவர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.
இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் ஆரி நடிக்கிறார் என கூறப்படுகிறது. ஸ்ரீ சாய் இசையமைக்கும் இப்படத்திற்கு ஸ்ரீ சாய் தேவ் ஒளிப்பதிவு செய்கிறார். விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.