பிரபல கிரிக்கெட் வீரர் மற்றும் பிக்பாஸ் பிரபலம் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது.
ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் ‘பிரெண்ட்ஷிப்’. இத்திரைப்படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாகவும் அவருக்கு ஜோடியாக பிக் பாஸ் லாஸ்லியாவும் நடிக்கிறார். மேலும் அர்ஜுன், சதீஷ், KPY பாலா ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தற்போது தமிழில் உருவாகி வரும் இப்படத்தினை ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் இப்படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரைலர் இந்த மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.