பட்ஜெட்டில் புதிய தேசிய வங்கி அமைக்கப்படுவது பற்றிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2021 – 22 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி-1 இல் தாக்கல் செய்ய உள்ளார். அப்போது நாட்டின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பதற்காக புதிய தேசிய வங்கி அமைக்கப்படுவது பற்றிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வங்கியில் மத்திய அரசு ரூபாய் 20 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் மேலும். பங்கு மூலதனத்தை ஒரு லட்சம் வரை அதிகரிக்க அனுமதிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.