சிங்கப்பூரில் ஓமிக்ரான் வைரஸின் புதிய வகையான பிஏ.2.12.1 என்ற தொற்றால் இருவர் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
சிங்கப்பூரின் அதிகாரிகள் புதிய வகை கொரோனா வைரஸை கண்டறியும் சுகாதாரத்துறை அமைச்சகத்தினுடைய திட்டப்படி இரண்டு நபர்களுக்கு பிஏ.2.12.1 என்ற புதிய வகை ஒமிக்ரான் தொற்று பாதிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள்.
எனினும், அவர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவுடன் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டதாக கூறியுள்ளனர். பிஏ.2.12.1 என்ற புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் அதிக பாதிப்பு கொண்டது என்று உலக சுகாதார மையம் தற்போது வரை அறிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.