ரிலைன்ஸ் அறக்கட்டளை பெண்களுக்கு முன்னேற்றத்தைக் கொடுக்கும் வகையில் புதிய அமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரிலையன்ஸ் அறக்கட்டளையானது இந்தியாவில் பல்வேறு சமூக நற்பணிகளை செய்து வருகிறது. இதில் சிறப்பாக மாணவர்கள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு, அவர்களின் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு பல வழிகளிலும் உதவியாக இருந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் முன்னேற்றத்திற்கு உதவி செய்யும் வகையில் சர்வதேச பெண்கள் முன்னேற்ற அமைப்புடன் ரிலையன்ஸ் நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டமானது பெண்களின் முன்னேற்றத்திற்கும் தொழில் வாய்ப்புக்கும் பலன் கிடைக்கும் வகையில் அமையும். மேலும் அமெரிக்க சர்வதேச வளர்ச்சி மையத்துடன் சேர்ந்து மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் இந்தியா முழுவதும் உள்ள பெண்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்க முடியும் என்று ரிலையன்ஸ் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. பெண்களின் பொருளாதார நிலையை உயர்த்துவது தான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என்று அமெரிக்க அதிபரின் ஆலோசகரான இவாங்கா டிரம்ப் தெரிவித்துள்ளார்.