சுகந்தலை ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்ற திரு. வெங்கடேசனை பல்வேறு தரப்பினர் வாழ்த்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் இரண்டு கட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது. இரவு பகலாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திமுக கூட்டணி அதிக மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர் இடங்களை கைப்பற்றியது. திமுக தலைமையிலான கூட்டணி 272 , 2338 இடங்களையும் , அதிமுக 241 , 2185 இடங்களையும் கைப்பற்றியது.
தேர்தல் முடிவுகள் தொடர்ந்து அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆழ்வார்திருநகரி ஒன்றியத்திற்குட்பட்ட தேர்தல் முடிவுகள் நேற்றே அறிவிக்கப்பட்டன. இதில் சுகந்தலை ஊராட்சி மன்ற தேர்தலில் விவசாயி திரு. வெங்கடேசன் என்பவர் வெற்றி பெற்று பஞ்சாயத்து தலைவராக தேர்வாகினார்.
வெற்றி பெற்ற வெங்கடேசனை சுகந்தலை , வெள்ளகோவில் , மரந்தலை பகுதியில் உள்ள இளைஞர்கள் உட்பட பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சுகந்தலை கிராம மக்கள் வெற்றி பெற்ற வெங்கடேசன் அவர்களை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்தினர். சுகந்தலை கிராமத்தின் முன்னாள் ஊர் தலைவராக பணியாற்றிய திரு.முத்துராஜ் அவர்களின் தலைமையில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.