Categories
தேசிய செய்திகள்

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தடையில்லை… டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு..!!!

டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தற்போது உள்ள நாடாளுமன்றம் 94 ஆண்டுகள் பழமையானது. இது கட்டும்போது 83 லட்சம் செலவானது. இந்த கட்டிடத்தை இடிக்காமல் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் புதிய முக்கோண வடிவ நாடாளுமன்றம் கட்டப்பட உள்ளது. இதற்காகச் சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. அதி நவீன வசதிகளுடன் கட்டப்படும் புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். இதன் கீழ் கட்டிடம் கட்டப்பட்டு வருகின்றது.

இதையடுத்து சென்ட்ரல் விஸ்டா கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இரண்டு வாரத்திற்கு முன் டெல்லி உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இதையடுத்து இன்று விசாரணை செய்த டெல்லி நீதிமன்றம் புதிய நாடாளுமன்றம் உள்ளிட்ட கட்டுமான பணிகளை தடை விதிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தது. அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கைத் தொடர்ந்த மனுதாரருக்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |