Categories
மாநில செய்திகள்

நேற்று ஒரே நாளில்… மது விற்பனையில் புதிய உச்சம்… எவ்வளவு தெரியுமா..?

நேற்று ஒரே நாளில் மது பிரியர்கள் அதிக மதுபான பாட்டில்களை வாங்கி கோடிக்கணக்கில் வசூல் அள்ளிக் கொடுத்துள்ளனர்.

உலகம் முழுவதும் மக்களை முடக்கிப் போட்டு இருக்கும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. என்னதான் ஊரடங்கு அமலில் இருந்தாலும் மது பிரியர்களை கட்டுக்குள் கொண்டு வருவது சற்று சிரமமாகத்தான் உள்ளது. ஆனால் அவர்களால் தான் மாநிலத்தில் பொருளாதார இழப்பு மேம்பட்டு வருகிறது. அந்த வகையில்  தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 243 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், குடிமகன்கள் நேற்றே தங்களுக்கு தேவையான மது பாட்டில்களை அதிகம் வாங்கி வந்துள்ளனர். இதனால் விற்பனை அதிகரித்த நிலையில், சென்னை மண்டலத்தில் மட்டும் 52,50,00,000 ரூபாய்க்கும், திருச்சி மண்டலத்தில் 48,26,00,000 ரூபாய்க்கும் மது பாட்டில்கள் விற்பனையாகியுள்ளது. மேலும், மதுரை மண்டலத்தில் 49,75,00,000 ரூபாய்க்கும், சேலத்தில் 47,38,00,000 ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் 45,23,00,000 ரூபாய்க்கும் விற்பனையாகி பொருளாதார உச்சத்தை தொட்டுள்ளது.

Categories

Tech |