Categories
உலக செய்திகள்

“ஆஹா! இது நல்லா இருக்கே”….. தடுப்பூசி செலுத்தும் மிக்கி மவுஸ்…. பிரபல நாட்டில் நூதன திட்டம்….!!!

செக் குடியரசில் சிறுவர்களுக்கு தடுப்பூசி மீது இருக்கும் பயத்தை போக்குவதற்காக சுகாதார ஊழியர்கள் கார்ட்டூன் வேடமணிந்து தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள்.

தற்போது சில நாடுகளில் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி, மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், சிறுவர்கள் தடுப்பூசியால் ஏற்படும் சிறிய பக்கவிளைவுகளைக் கண்டு பயப்படுகிறார்கள். இதனால், தடுப்பூசி மீது அவர்களுக்கு இருக்கும் பயத்தை போக்குவதற்கும் அவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்காகவும் இத்திட்டத்தை மேற்கொண்டிருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

அதன்படி கார்ட்டூன் வேடங்களான, மிக்கி மவுஸ், பிகாச்சூ போன்ற கதாப்பாத்திரங்களில் சுகாதாரப் பணியாளர்கள் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துகிறார்கள். இதனால், சிறுவர்கள் மகிழ்ச்சியாக தடுப்பூசி செலுத்த வருகிறார்கள்.

Categories

Tech |