சூரிய மண்டலத்திற்கு வெளியே மழை மேகங்களுடன் புதிய கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சூரிய மண்டலத்திற்கு வெளியே சுமார் 128 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் K18-19P என்ற புதிய கோள் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். சில வருடங்களாக அதைஆராய்ச்சி செய்ததில், அதில் பூமியைப் போலவே மழைமேகங்கள் காணப்படுவதாக தெரிவித்தனர்.
இயற்கை சுழற்சி அங்கேயும் நடைபெறுகிறது எனில் அங்கும் உயிர்வாழ சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்று கூறிய விஞ்ஞானிகள், அதற்கான ஆராய்ச்சியில் தற்போது ஈடுபட்டு உள்ளனர். இது தற்போது உலக மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.