ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு (RRR) படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கி வருகிறார்.மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் பிறந்தநாளை முன்னிட்டு (RRR)படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இந்த மாஸான போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.