கொரோனா பரவல் காரணமாக புதிய அதிபர் பைடனின் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து பைடனின் இந்த வெற்றியை ஏற்க முடியாது என்று டிரம்ப் கூறி, பைடனுக்கு எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். ஆனால் அது தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது அமெரிகாவின் புதிய அதிபர் ஜோ பைடன் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில் ஜோ பைடன், துணை அதிபராக கமலா ஹாரிஸ் ஆகியோர் பதவி ஏற்கும் விழா வருகிற ஜனவரி மாதம் 20-ந்தேதி நடக்கிறது. இதில் இவர்கள் இருவரும் பதவிப்பிரமாணம் செய்து கொள்கிறார்கள். இந்நிலையில் வழக்கமாக அமெரிக்க அதிபரின் பதவி ஏற்பு விழாவுக்கு 2 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொண்டு பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெறும். ஆனால் இந்த முறை புதிய அதிபர் ஜோபைடனின் பதவி ஏற்பு விழா எளிமையாக நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டிருப்பதால் பொதுமக்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே எங்களுடைய குறிக்கோள். எனவே பதவி ஏற்பை பார்ப்பதற்காக மக்கள் யாரும் நேரில் வர வேண்டாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.