Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய தலைவர், புதிய செயலாளர், புதிய நிர்வாகிகள்…. திமுக தலைமை அறிவிப்பு …!!

திமுகவினுடைய மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி மாற்றம் செய்யப்பட்டு, அவர் துணைப் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மகளிர் அணிக்கு புதிய தலைவர்கள்,  செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கு திமுக தலைமை புதிய நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளது.

அதன்படி திமுகவினுடைய மகளிர் அணி தலைவராக சென்னை தேனாம்பேட்டை சேர்ந்த திருமதி விஜயா தாயன்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல மகளிர் அணி செயலாளராக நாகர்கோவிலை சேர்ந்த திருமதி ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

மகளிர் அணி இணைச் செயலாளராக குமரி விஜயகுமார் நியமனம்  நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் மகளிர் அணியினுடைய துணைச் செயலாளர்கள் மகளிர் அணி தொண்டர் அணி செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளுக்கும் புதிதாக நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Image

Image

Image

Image

Categories

Tech |