Categories
அரசியல்

“இனிக்காத பொங்கல்!”… ஸ்டாலின் மீது அதிருப்தியில் மக்கள்… கலக்கத்தில் தி.மு.க….!!!

தி.மு.க ஆட்சியில் பொங்கல் பரிசுடன் ரொக்கப்பணம் கொடுக்கப்படாததால் மக்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த ஆட்சியில் 2500 ரூபாய் வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆட்சியிலும் பொங்கல் பண்டிகையின் போது மக்களுக்கு ரொக்கத் தொகை வழங்கப்படும். எனவே, மக்கள் ஒவ்வொரு பொங்கல் பண்டிகைக்கும் அரசு தரும் தொகையை எதிர்பார்த்துக் காத்திருப்பர்.

ஆனால் இந்த முறை தி.மு.க ஆட்சியில் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை. மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் கொடுக்கப்பட்ட புளியில் பல்லி கிடந்ததாகவும், வெல்லம் உருகி இருந்ததாகவும் பிரச்சனைகள் ஏற்பட்டது. இதனால் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புதிய பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

அதாவது, அரசு வழங்கும் ரொக்கத்தொகை தான் பல மக்கள், உற்சாகமாக பொங்கல் பண்டிகை கொண்டாட வழிவகுத்தது. ஆனால், இம்முறை ரொக்கப்பணம் வழங்கப்படாதது அதிகமான மக்களுக்கு பெரும் குறையாக இருந்தது. பெரும்பாலான மக்களுக்கு பொங்கல் இனிக்கவில்லை. எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி, விரைவில் நடக்கவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பிரதிபலிக்க வாய்ப்பிருக்கிறது என்று திமுகவினர் கலக்கத்தில் உள்ளதாக கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |