தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், ஷாம், யோகி பாபு, குஷ்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையின் போது படம் ரிலீஸ் ஆகும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த படத்தின் ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அதன் பிறகு வாரிசு திரைப்படத்துடன் துணிவு திரைப்படமும் ரிலீஸ் ஆவதால் தமிழகத்தில் வாரிசுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்பட்டது. ஆனால் உதயநிதி ஸ்டாலின் வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் சமமான தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்று கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்நிலையில் வாரிசு திரைப்படத்திற்கு மற்றொரு புதிய சிக்கலும் ஏற்பட்டுள்ளது.
அதாவது பொங்கல் பண்டிகையின் போது தெலுங்கு படங்களுக்கு தான் ஆந்திராவில் அதிக முன்னுரிமை வழங்கப்படும் என தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக வாரிசு திரைப்படத்திற்கு தியேட்டருக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் வம்சி தெலுங்கு இயக்குனராக இருக்கும் பட்சத்தில் வாரிசு தமிழ் படம் என்பதால் குறைவான தியேட்டர்கள் தான் படத்திற்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.