உலக அளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளமாக பேஸ்புக் இருக்கிறது. இந்த பேஸ்புக் மெட்டா நிறுவனத்தின் கீழ் வந்த பிறகு வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவைகளும் மெட்டா நிறுவனத்தின் கீழ் இணைக்கப்பட்டது. மெட்டா நிறுவனமானது வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவைகளுக்கு ஒவ்வொரு நாளும் புது புது அப்டேட்டுகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் வாட்ஸ் அப் 2 மணி நேரமாக முடங்கி பயனாளர்கள் மிகவும் அவதிப்பட்டனர். அந்த வகையில் இன்று காலை 9 மணி முதல் பேஸ்புக்கையும் பயனர்கள் லாகின் கூட செய்ய அவஸ்தை படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் முகநூல் பக்கத்தில் உள்ள கிரியேட்டர் ஸ்டூடியோ மற்றும் ஆட் மேனேஜர் சர்வீசஸ் பிளாட்பார்ம்களில் லாகின் செய்ய முடியவில்லையாம். இதனையடுத்து ஆட் மேனேஜர் சர்வீசஸ் என்பது விளம்பரங்களை நிர்வகிக்க பயன்படுத்தும் தளமாகும். இதை லாகின் செய்ய முடியாததற்கான காரணம் சரிவர தெரியவில்லை. மேலும் இது குறித்து மெட்டா நிறுவனம் விரைவில் விளக்கம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.