Categories
மாநில செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க புதிய நடைமுறை: மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு!!

ஆரம்ப சுகாதார மையங்களுக்கு கொரோனா பாதிப்புடன் வருபவர்களுக்கு தனி பாதையை ஏற்படுத்த வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், ” கர்ப்பிணிகளுக்கு கொரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்க புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மருத்துவமனைகளில் நோயாளிகள் காத்திருப்பு அறை, இருக்கைகள், கழிவறைகளை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு நடைமுறைகளை மாவட்ட ஆட்சியர் கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்றுவரை நம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் அதிகபடச்சமாக 10,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் கர்ப்பிணி பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில், தலைமை செயலாளர் சண்முகம் சில வழிமுறைகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளது.

Categories

Tech |